தஞ்சாவூர்:கும்பகோணம் நால்ரோடு அருகே ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரின் மனைவி சந்திரா (68). இவர் இன்று காலை இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளனர்.
இறைச்சி வாங்க சென்ற மூதாட்டியிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு!
கும்பகோணத்தில் இறைச்சி வாங்கச் சென்ற மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இறைச்சி வாங்க சென்ற மூதாட்டியிடம் இருந்து 10 சவரன் நகை பறிப்பு!
அப்போது ஒருவன் வேகமாக வந்து மூதாட்டி அணிந்திருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 சவரன் தாலிச்சங்கிலியை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிசென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கும்பகோணம் மேற்கு காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ரூ.40 லட்சம் கடனை அடைக்க முடியாமல் கொள்ளை நாடகம் - வடமாநில கில்லாடி கைது