சமீபத்தில் நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் சரியான பராமரிப்பு இல்லை மிகவும் மோசமாக உள்ளது என விருது வழங்கும் விழா ஒன்றில் பேசினார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், ஜோதிகா சுட்டிக்காட்டிய அதே மருத்துவமனையில் பணி புரியும் பெண் ஊழியரை, மருத்துவமனை வளாகத்தினுள் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இவர் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்
ஜோதிகா குறிப்பிட்ட மருத்துவமனையில் சிக்கிய கொடிய விஷமுள்ள 10 பாம்புகள் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் மருத்துவமனை வளாகத்தில் பாம்பு பிடிக்கும் பணி நடைபெற்றது. ஜேசிபிகள் மூலம் புதர்களை சுத்தம் செய்ததில், கொடிய விஷமுள்ள 5 கட்டுவிரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். இச்சம்பவம் மருத்துவமனைக்கு தினந்தோறும் வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'நல்லோர் சிந்தனைகளைப் படிக்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை'- சூர்யா