தென்காசிசுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் பொது மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். இது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சுந்தரபாண்டியபுரம் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட தென்காசியை சேர்ந்த செய்யது சுலைமான் தாதாபீர் (21), சேக்மைதீன் (19), முகம்மது (21) ஆகிய மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.