தென்காசி: விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் ஒன்று அலுவலக வாயில் முன்பு வைத்து ராஜேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு போலீசார் தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ராஜேஷின் உறவினர்கள் தற்போது திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நீ மட்டும்தான் வீடியோ காட்டுவியா? - ஆபாச வீடியோவால் இளைஞரை கொலை.. தென்காசி எலும்புக்கூடு வழக்கில் பகீர் தகவல்!