தென்காசி மாவட்டம் சிவகிரி வஉசி வடக்குத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் அஜீத்(22). இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
காவலர் தாக்கியதால் விஷம் குடித்த இளைஞர்
தென்காசி: சிவகிரியில் காவல் துறை ஆய்வாளர் தாக்கியதாக கூறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமயைில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் அஜீத் விவசாய நிலத்திற்க்கு சென்றுவிட்டு வரும்போது சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் எந்தவித காரணமுமின்றி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டிற்கு சென்று எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பாரத்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் காவல் துறை உயர் அலுவலர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.