தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி பனையடியான் கோவில் தெருவில், பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக நண்பர்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் ஒன்று நடந்து வந்துள்ளது.
இளைஞரின் துடிப்பான செயலால் மூடப்பட்ட சூதாட்ட கிளப் - Casino club closed
தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே அரசு இலவச பசுமை வீட்டில் நடந்து வந்த சூதாட்ட கிளப் ஒன்றை அலுவலர்கள் மூடியுள்ளனர்.
இது அப்பகுதியில் பல குடும்பங்களிடையே அதிருப்தியை ஏற்படுதியுள்ளது. இதற்கிடையில், அந்தப் குதியை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், இதுகுறித்துவட்டார வளர்ச்சி அலுவலர், துணை ஆட்சியர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அலுவலர்கள், பசுமை வீடு பயனாளி தனது வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டதும், அந்த வீட்டில் நண்பர்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நான்கு ஆண்டுகளாக சூதாட்ட கிளப் நடைபெற்று வந்ததும் தெரிய வந்ததது.
இதனையடுத்து பசுமை வீட்டில் நடந்து வந்த சூதாட்ட கிளப் மூடப்பட்டது. பயனாளி வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அங்கு சூதாட்ட கிளப் நடந்து வந்ததால், அந்தப் பயனாளியின் மானிய தொகை, வட்டியுடன் கூடிய பணம் திரும்ப பெறப்பட உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். இளைஞரின் முயற்சியால் சூதாட்ட கிளப் மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.