தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா திரையரங்கு சாலை பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அதில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு பகுதியான ஒரு தரப்பினருக்குரிய கோவிலின் முகப்பு பகுதியான உண்டியல், மணி உள்ளிட்டவற்றை ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடித்து விட்டனர்.
ஆனால் அருகே இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றாமல் விட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 40க்கும் மேற்ப்பட்ட மக்கள் நேற்று (ஜூன் 23)போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கே திடிரென்று மாரியப்பன் என்ற இளைஞர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை காவல் துறையினர் தடுத்து தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.