வரக்கூடிய சட்டப்பேரவை பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தென்காசி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ராம ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சின்னங்கள் வரைதல், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
தேர்தலில் இளம் வாக்காளர்கள் பாஜக பக்கம் இருப்பார்கள்:நயினார் நாகேந்திரன் - Nayyar Nagendran
தென்காசி: தமிழ்நாட்டில் வரக்கூடிய சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் இளம் வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் இருப்பார்கள் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
![தேர்தலில் இளம் வாக்காளர்கள் பாஜக பக்கம் இருப்பார்கள்:நயினார் நாகேந்திரன் bjp deputy leader](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10330502-thumbnail-3x2-11.jpg)
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி விகிதம், ஏற்கெனவே ஆளும் கட்சியான அதிமுகவின் பலம் ,மற்ற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைகையில் மீண்டும் தமிழ்நாட்டில் இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நம்பிக்கை உள்ளது. தேர்தலில் புதிய வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் இருப்பார்கள்” என்றார்.
சசிகலா வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா விடுதலையான பின்னரே அது தெரியவரும் எனவும் தெரிவித்தார்.