தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் இளம்பெண் வெட்டிக்கொலை- பரபரப்பு தகவல்கள்! - இளம் பெண் கொலை

தென்காசி: ஆலங்குளம் அருகே இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீதா
சங்கீதா

By

Published : Jul 22, 2021, 5:33 PM IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா (26). இவருக்கு ஏற்கனவே கண்ணன் (30) என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மறுமணம்

இதனையடுத்து சங்கீதாவுக்கு அவரது பெற்றோர் கல்லூத்து பகுதியில் வசிக்கும் பொன் ராஜ் (28) என்பவருடன் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துவைத்தனர்.

இந்நிலையில், பொன்ராஜ் இன்று (ஜூலை 22) வேலைக்கு சென்றதை தெரிந்துகொண்ட கண்ணன், வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளார்.

காவல் துறையினர் விசாரணை

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சங்கீதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சங்கீதாவின் முதல் கணவர் கண்ணன் இன்று காலை கல்லூத்துக்கு சென்று, திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் எனக் கூறி சங்கீதாவின் முகவரியை விசாரித்து, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து வீரகேரளம்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை-குற்றவாளிக்கு வலை

ABOUT THE AUTHOR

...view details