தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டிலில் கட்டிப்போட்டு அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - கணவர் பரபரப்பு வாக்குமூலம்! - tenkasi

தென்காசியில் கட்டிலில் கட்டிப்போட்டு அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்க்கப்பட்ட வழக்கில் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தன்னை மதிக்காமல் பேசிய ஆத்திரத்தில் கொலை செய்ததாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் சடலமாக   மீட்க்கப்பட்ட வழக்கில் கைதுசெய்ய பட்டுள்ள சந்திரன்
பெண் சடலமாக மீட்க்கப்பட்ட வழக்கில் கைதுசெய்ய பட்டுள்ள சந்திரன்

By

Published : Jun 24, 2023, 8:59 PM IST

தென்காசி நகரப் பகுதியான நடு மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர், சந்திரன் (50). இவரது மனைவி சித்ரா (45). இவர்களுக்குக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், குழந்தைகள் இல்லை. மேலும் சந்திரன் வேலைக்கு எதுவும் செல்லாத நிலையில் சித்ரா கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். குழந்தையை இல்லாததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்திரனின் வீடு கடந்த சில தினங்களாக பூட்டிக் கிடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் சந்திரனுக்குப் போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால், மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், மாலை வரை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் தென்காசி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பூட்டிய வீட்டை உடைத்து பார்த்த போது மனைவி சித்ரா கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் சடலமாக இறந்துகிடந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து உடலைக் கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் துவங்கியபோது, சந்தேகத்தின் பேரில் கணவன் சந்திரனை தொடர்பு கொண்டபோது அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் கணவன் மீது சந்தேகம் அடைந்து அவரின் செல்போன் டவரை டிராக் செய்தபோது, அவர் திருச்செந்தூரில் உள்ள மண்டபத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இச்சம்பவம் குறித்து கணவர் சந்திரன் போலீசாரிடம் கூறும்போது, ''குழந்தைகள் இல்லாததால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் நான் சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்பதால் உறவினர்கள் யாரும் என்னை மதிக்கவில்லை. மேலும் என்மீது மனைவிக்குச் சந்தேக குணமும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது’’ என்றுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கடந்த 19ஆம் தேதி இரவு சந்திரன் மற்றும் மனைவி சித்ரா இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து 20ஆம் தேதி அதிகாலை சந்திரன் வீட்டிலிருந்த பிரஷர் மாத்திரைகளை அதிகமாக சித்ராவிற்கு கொடுத்து தூங்க வைத்துள்ளார். தூங்கிய பிறகு கை, கால்களைக் கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்து கத்தியால் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்துள்ளார். வேலைக்குச்செல்லாததைக் காரணம் காட்டி மதிக்காமல் பேசியதால் ஆத்திரத்தில் இவ்வாறு கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்’’ எனத்தெரிவித்தனர்.

தன்னை மதிக்காத ஆத்திரத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி நகரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி கைது - பணியில் இருந்த காவலரை வசைபாடியதால் வந்த சோதனை

ABOUT THE AUTHOR

...view details