தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம்.. கொய்யாத் தோப்பில் குவிந்த போலீசார்.. - woman’s body found stuffed in sack investigation going on

தென்காசி: கொய்யாத் தோப்பிற்குள் கிடந்த சாக்கு மூட்டையில், சிதைந்த முகத்துடன் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலத்தை கைப்பற்றி காவல் துறையினர் தீவிர, விசாரணை நடத்திவருகின்றனர்.

investigation going on
காவல் துறையினர் விசாரணை

By

Published : Mar 6, 2021, 5:29 PM IST

தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் கொய்யாத்தோப்பில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஆலங்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டதில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைக்குள் சடலம் இருந்ததை கண்டறிந்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், "அடையாளம் தெரியாத நபர்கள் பெண் ஒருவரின் முகத்தை சிதைத்து கொடூரமான முறையில் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கொய்யாத்தோப்பில் வீசி சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.மேலும் கொலையான பெண்ணிற்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், முகம் சிதைக்கப்பட்டதால் அடையாளம் தெரியவில்லை என்றும் கூறினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பெரம்பலூர்: நன்னடத்தை விதிகளை மீறிய 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details