தென்காசி:சொக்கம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாள்களாக அங்குள்ள வாழை மற்றும் தென்னந்தோப்பில் காட்டு யானை இரண்டு குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தென்னை, வாழைகள் சேதமாகின.