தென்காசி :செங்கோட்டை தாலுகாவில் உள்ள திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா,இவரது மகன் முருகன் (வயது 42) இவரது மனைவி நாச்சியார் (வயது 35).
மிளகாய்ப் பொடி தூவி கட்டையால் அடி!
இந்தத் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று(ஜன.29) முருகன் அவரது வீட்டிற்கு இன்னொரு பெண்ணை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த முருகனின் மனைவி நாச்சியார் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகன் அழைத்து வந்த பெண்ணுக்கும், நாச்சியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சமாதானப்படுத்தி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முருகன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து அவரது மனைவி நாச்சியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் தகராறு முற்றவே கோபமடைந்த நாச்சியார், வீட்டில் இருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து முருகனின் கண்ணில் தூவிவிட்டு அருகே இருந்த கட்டையை எடுத்து முருகனை கடுமையாகத் தாக்கியுள்ளார்.