தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் 'ஸோகோ' மென்பொருள் நிறுவன விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி! - yoga

தென்காசி தனியார் மென்பொருள் நிறுவன விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தென்காசி தனியார் மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!
”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் தந்த யோகாவை பின்பற்ற வேண்டும்” - ஆளுநர் ஆர்.என்.ரவி

By

Published : Jun 19, 2022, 1:28 PM IST

தென்காசிமாவட்டம், மத்தாளம்பாறையில் ஸோகோ மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. கிராமப்புற மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வருகை தந்தார். அவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், மென்பொருள் நிறுவன நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து நிறுவனத்தை ஆளுநர் சுற்றிப் பார்த்த பின்னர் நடந்த விழாவில் பேசுகையில், 'கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நிறுவனங்கள் செல்லும் நிலையில் நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி வந்துள்ளது இந்த ஸோகோ நிறுவனம். கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, நல்ல ஊதியத்தையும் வழங்குவதால் அவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக உள்ளன. இந்த நிறுவனம் இன்னும் பல கிராமங்களின் மாணவ, மாணவிகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் வகையில் செயல்பட்டு நம் நாட்டை உலக நாடுகளுக்கு முன்னோடியாக உயர்த்த வேண்டும்' எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநர் வருகையை அடுத்து மத்தாளம்பாறை பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தென்காசி தனியார் மென்பொருள் நிறுவன விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

இதையும் படிங்க:வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details