தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீசன் வரும் முன்பே ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி..! - சாரல்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

continuous rains  water level increase in waterfalls  kutralam falls  water level increase in kutralam falls  அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு  தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு  தமிழ்நாட்டில் தொடர் மழை  மேற்கு தொடர்ச்சி மலை  மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை  குற்றாலம் அருவி
குற்றாலம் அருவி

By

Published : Apr 14, 2022, 3:58 PM IST

Updated : Apr 14, 2022, 7:39 PM IST

தென்காசி:தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஏப் 13) மாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வர தொடங்கி உள்ளனர்.

ஆர்ப்பரிக்கும் குற்றாலம் அருவி

மேலும் தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பகல் வேளைகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், மாலை நேரத்தில் பெய்கின்ற மழையால் மக்களை மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: மேலடுக்கு சுழற்சி: தென் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Last Updated : Apr 14, 2022, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details