தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் களைகட்டும். இந்தாண்டு கரோனாவால் விதிக்கப்பட்டுள்ள தடையால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் களையிழந்துள்ளது. இது ஒருபுறமிருக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால சீசன் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துவந்தது.
சாரல் மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்! - ஐந்தருவி
தென்காசி: கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிவருகிறது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்களான நிலையிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாள்களில் மட்டுமே மழை பெய்தது. இதனால் இந்தாண்டும் அருவிகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தாலும், ஏமாற்றத்துடனே திரும்பியிருப்பார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அங்கு கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டிவருகிறது. மாவட்டம் முழுவதும் சாரல் மழையின் காரணமாக இதமான காற்று வீசிவருவதால் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க:நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்