தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றாலத்தில் தண்ணீர் வரத்து; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! - water flow in kotralam water falls has began

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

water flow in kotralam water falls has began
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து தொடங்கியது

By

Published : Mar 10, 2020, 3:24 PM IST

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள் நிலையில் பொதுமக்கள் வெளியே வர அவதிப்பட்டு வந்தனர். இச்சூழலில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது சுற்றியுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details