தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன்படி தென்காசி மாவட்டத்திற்கான வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனுப்பட்டன. அவை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பான வைக்கப்பட்டன.
வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன
தென்காசி: சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
Voting machines were sent to the Tasildhar's offices in Tenkasi district
அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 04) இயந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் தலைமையில் நடைபெற்றது. இப்பணியின் போது, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உடனிருந்தனர். இங்கிருந்து அனுப்பப்படும் இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படஉள்ளன.
இதையும் படிங்க:அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்!
TAGGED:
tenkasi election