தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் முறைகேடு: வேட்பாளர் வெற்றியை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் புகார் - தென்காசி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு

தென்காசி புளியங்குடி நகராட்சி தேர்தலில் 33ஆவது வார்டில் போட்டியிட்ட பெண், சாதி சான்றிதழில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்
விஸ்வ ஹிந்து பரிஷத் புகார்

By

Published : Mar 1, 2022, 2:17 PM IST

தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 33ஆவது வார்டு பட்டியலின பொது தொகுதியாக இருந்த நிலையில் இந்த வார்டில் போட்டியிட்ட விஜயா என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தநிலையில், விஜயா 2003ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் BC சான்றிதழ் பெற்றதாகவும், கடந்த பிப்.5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் SC சான்றிதழ் முறைகேடாக பெற்றதாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார் கூறினர். இதுதொடர்பாக இந்த அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று (மார்ச்.1) விஜயா தேர்தல் வெற்றியைக் கண்டித்து, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி ஜெயக்குமார் மனு

ABOUT THE AUTHOR

...view details