தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Video:பாலித்தீன் கவரில் சிக்கியிருந்த கீரி பத்திரமாக மீட்பு; ஐந்தறிவு ஜீவராசியின் ஆச்சரியப்படுத்தும் நன்றியுணர்வு! - Video viral that saved the life of a farmer

சங்கரன்கோவில் அருகே கீரிப்பிள்ளைக்கு விவசாயி ஒருவர், உதவி செய்ததால் விவசாயின் செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருவதோடு கீரிப்பிள்ளையே காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை உயிரை காப்பாற்றிய வீடியோ வைரல்
விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை உயிரை காப்பாற்றிய வீடியோ வைரல்

By

Published : May 27, 2022, 7:28 PM IST

தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ஆலங்குளம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கீரிப்பிள்ளை தலையில் பாலித்தீன் கவர் வசமாக மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்தது.

இதனையடுத்து வெகுநேரமாக அங்கும் இங்கும் சுற்றித் தெரிந்த நிலையில், அதனைக்கண்ட அங்குள்ள விவசாயி கீரிப்பிள்ளையின் தலையில் மாட்டியிருந்த பாலித்தீன் கவரை அகற்றி, அதற்கு உதவி புரிந்து கொண்டார்.

இதனையடுத்து சற்று நேரம் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்குமிங்கும் பார்த்துவிட்டு, பின்னர் அந்தப்பகுதியை விட்டு, மெதுவாக ஊர்ந்து மறைவுப் பகுதிக்குள் சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.விவசாயின் செயலுக்கு அப்பகுதி பொது மக்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

விவசாயி ஒருவர் கீரிப்பிள்ளை உயிரை காப்பாற்றிய வீடியோ வைரல்

இதையும் படிங்க:வால்பாறையில் காட்டு யானைகள் முகாம்.. அச்சத்தில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details