தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் அன்பு! - Tenkasi Collector Ravichandran

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் உரிமையுடன் தனக்கு சேலை வாங்கித்தரும்படி கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் வீடியோ..!
உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் வீடியோ..!

By

Published : Feb 9, 2023, 4:33 PM IST

உரிமையுடன் சேலை கேட்ட பாட்டி: நெகிழ வைத்த கலெக்டரின் வீடியோ..!

தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், தென்காசி மாவட்ட புதிய 5-வது ஆட்சியராக ரவிச்சந்திரன் பொறுப்பு ஏற்றிருக்கிறார். பதவியேற்ற நாள் முதல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஆலங்குளம் பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படும் நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், மருதம்புத்தூர், உடையாம்புளி கிராமத்தில் வீடு வீடாக சென்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது உடையாம்புளி கிராமத்தில் உள்ள தெருவில் ஆய்வு செய்தபோது திடீரென வந்து மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி ஒருவர் உரிமையுடன் தனக்கு சேலை எடுத்துக்கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

இதனால் அருகில் இருந்த அதிகாரிகளே ஆச்சரியம் அடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார். அப்போது அந்த மூதாட்டி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:ஈஷா யோகா மைய மகா சிவராத்திரியில் குடியரசுத் தலைவர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details