தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காருக்குள் கட்டுகட்டாக பணம்.. பெண் அதிகாரியை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் நடந்தது என்ன? - செங்கோட்டை அரசு அதிகாரி சஸ்பெண்ட்

Vehicle Motor Inspector arrested in Sengottai:தென்காசி மாவட்டம் புளியரையில் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து நடந்திய திடீர் சோதனையில், வாகன மோட்டார் ஆய்வாளரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.2.76 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 8:58 PM IST

வாகன மோட்டார் ஆய்வாளரிடம் இருந்த கணக்கில் வராத ரூ.2.76 லட்சம் பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

தென்காசி:தமிழ்நாட்டிலிருந்து கேரளா செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றதாக வாகன மோட்டார் ஆய்வாளரிடம் இருந்து ரூ.2.76 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி பகுதியில் தினசரி பல்வேறு விதமான மாவட்டங்களில் இருந்து லாரிகள் சரக்கு வாகனங்கள் பல்வேறு விதமான பொருள்களை ஏற்றி கேரளா மாநிலத்திற்கு செல்வது வழக்கம். அதேபோல், கேரளாவில் இருந்தும் தமிழ்நாட்டிற்குள் வாகனம் வந்துபோவது வழக்கம். மேலும் பால் வண்டிகள், காய்கறி வாகனங்கள் உள்ளிட்டவைகள் என தினசரி தினசரி அதிகமாகவே செல்வது உண்டு.

இந்த நிலையில் புளியரை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வேலைப்பார்த்து வந்த வாகன மோட்டார் ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி(57) அவர்களிடம் சோதனை செய்தபோது, அவர்கள் காரில் கொண்டு வந்த சுமார் ரூ.2.76 லட்சம் பணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். இப்பணத்திற்கு முறையாக விளக்கம் தராத நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் பால் சுதாகர், தினமும் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகள், ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டதால், யாரும் இனி எவ்விதமான கட்டணங்களும் சோதனை சாவடிகளில் கட்ட வேண்டாம் எனவும்; வாகன ஓட்டுநர்களிடம் நடத்திய சோதனையில், காவலர்களுக்கு பணம் வழங்குவதும் அதற்காக சீட்டுகள் அளிப்பதும் கண்டறியப்பட்டது. இனிவரும் காலங்களில் எந்த வாகன ஓட்டுநர்களும் இதுபோல, காவலர்களுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ பணம் கொடுக்க வேண்டாம்' என தெரிவித்தார்.

இதேபோல் சம்பவம் தொடராமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் வாகன ஓட்டுனர்களும் வாகன உரிமையாளர்களும் இனிவரும் நாட்களில் சோதனை சாவடிகளில் எந்தவிதமான பணங்களும் கொடுக்க வேண்டாம். அதேபோல், காவலர்களுக்கும் எந்தவிதமான பணங்களை கொடுக்க வேண்டாம்' என கூறியுள்ளார்.

வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி, மூன்று நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இவர் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன.

இதனிடையே, டிஎஸ்பி பால் சுதர் தலைமையிலான காவல் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, சார்பு காவல் ஆய்வாளர்கள் ரவி, ராஜா உள்ளிட்ட போலீசார் சாதாரண உடையில் சோதனை சாவடியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மூன்று நாட்களாக இவரை கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று புளியரை பகுதியிலிருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்றபோது, அவரது காரை மடக்கிப் பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை செய்தபோது காரினுள் இருந்த கணக்கில் வராத ரூ.2.76 லட்சம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:LKG மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்; மூக்கில் ரத்தம் வந்ததால் மருத்துவமனையில் அனுமதி.. வேலூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details