தென்காசிமாவட்டத்திலுள்ள ஒருஅரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி, நேற்று முன்தினம் (மார்ச் 23) பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் திண்பண்டங்கள் வாங்கித் தருவதாக கூறி சிறுமியிடம் தனிமையில் தவறுதலாக நடந்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிறு வலி ஏற்படவே பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.