தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்றானது தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் நாளை (ஆக்ஸ்ட் 7) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த எம்எல்ஏ மனோகரனுக்கு கரோனா! - வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர்
18:15 August 06
தென்காசி: முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் அரசு அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கரோனா பரிசோதனை செய்து கொண்ட தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரனுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக வைரஸ் தொற்று காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் என 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், மக்கள் பிரதிநிதிகன் மீதான வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் 900 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் சென்டர் - முதலமைச்சர் நேரில் ஆய்வு