தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ - வாக்கு செலுத்திய வைகோ

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும், திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

vaiko voted in his constituency
vaiko voted in his constituency

By

Published : Apr 6, 2021, 12:13 PM IST

Updated : Apr 6, 2021, 3:58 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் தனது வாக்கினை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் : 155-இல் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி ஆகியோர் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர்.

உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆர்வத்தோடு நடைபெறுகிறது. உழைக்கும் மக்கள் அனைவரின் முகத்திலும் பொன் சிரிப்பை காண முடிகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும், திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

மேலும், கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக மனு அளித்தது தொடர்பான கேள்விக்கு அவர், அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு போய்விடும் என தெரிவித்தார்.

Last Updated : Apr 6, 2021, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details