காலிப்பணியிடங்கள்:
வட்டார இயக்க மேலாளர்கள் – 3
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – 24
என மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office ல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணிணி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் உள்ளவர்கள் வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் பெண் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், தென்காசி-627811 என்ற முகவரிக்கு, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 20-10-2022 தேதிக்குள் சென்றடையும் படி அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க:National Health Missionல் பணி வாய்ப்பு