பூட்டை உடைத்து கோயில் பாத்திரங்கள் திருட்டு தென்காசி: குற்றாலத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் உள்ளது குற்றால நாதர் கோயில். அப்பகுதியில் உள்ள கோயில்களுள் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. சொக்கம்பட்டி ஜமீன் குற்றால நாதர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் சத்திரமாக கல் மண்டபம் ஒன்றை கட்டியுள்ளார்.
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு அன்னதானம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பராமறிப்பின்றி இருக்கும் இந்த கல் மண்டபம் பேரூராட்சிக்குச் சொந்தனானதா? அறநிலையத்துறைக்குச் சொந்தமானதா என்ற குழப்பம் மக்களிடையே இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த கல் மண்டபத்தில் பழங்காலத்தை சார்ந்த செம்பு, பித்தளை பாத்திரங்கள் இருந்துள்ளது. அவற்றின் பாதுகாப்பு கருதி, பழமையான பாத்திரங்களை கல் மண்டபத்தில் இருந்து, குற்றாலம் மெயின் அருவிக்கு மாற்றி வைக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது, அந்த பழைய பாத்திரங்களை மண்டபத்தின் கதவை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படும் செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கதவின் பூட்டை உடைத்து பழமையான பாத்திரங்களை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க:தரிசாகும் தஞ்சை... கருகும் நெல் பயிரை காக்க... குடத்தில் தண்ணீர் கொண்டு நீர் பாய்ச்சும் அவலம்!
மேலும் இது குறித்து அந்த கல் மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்கும் போது, இந்த இடத்தில் பழமைவாய்ந்த சமயல் பாத்திறங்கள் இருந்ததாகவும், அவற்றை கடந்த ஆண்டு பேரூராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளனர். தற்போது பேரூராட்சி பணியாளர்கள், பழமையான பாத்திரங்களை எடுத்துச் செல்லும் வீடியோவை மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பழமையான பாத்திரங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்கும் போது, இந்த இடம் குறித்து பேரூராட்சிக்கும் அறநிலையத்துறைக்கு நடந்து வரும் வழக்கை பற்றி மட்டுமே தெரிவிக்கின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோது, அந்த இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் திருடு போவதாகவும், அவை அப்போதைய பேரூராட்சி நிர்வாகி தலைமையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புதுறை இதில் தலையிட்டு, விசாரணை நடத்தி, பழமைவாய்ந்த பொருள்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன்