தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்குமரன் (32). திருமணமான இவருக்கு கடந்த பத்து நள்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் பணி முடிந்து திருநெல்வேலி - தென்காசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது சம்பா தெரு அருகே வந்தபோது, எதிரேவந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அருள்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.