தென்காசி: சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் பகுதியில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பால் வேன் மோதிய விபத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகள் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவரை பணிக்கு அழைத்துக் கொண்டு கரிசல் குளத்தில் உள்ள புதிதாக கட்டிய வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பெருங்கோட்டூர் பகுதியில் பால் வேன் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது ஜெகநாதனின் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டிலிருந்து பூ கொண்டு செல்வதற்காக சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த மதுராபுரியைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் அமுதா ராணி மீது மோதியது.