தென்காசி: கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொலை வழக்கிலும், புளியங்குடி பகுதியில் மணல் திருட்டு போன்ற தொடர் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மாரிப்பாண்டி என்ற நபரையும், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு மற்றும் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த கிடாரக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் கோபால் (எ) நவநீத கோபாலகிருஷ்ணன் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இரண்டு கொலைக் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - goondas act
வெவ்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![இரண்டு கொலைக் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது goondas act](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14262056-thumbnail-3x2-ten.jpg)
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் அறிவுறுத்தலின்படி இருவரது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!