தென்காசி: பழைய குற்றாலம் அருகேவுள்ள ஆயிரப்பேரி, பாட்டப்பத்து கிராமத்திலுள்ள தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக குற்றாலம் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பராமரித்து வரும் தென்னந்தோப்பில் உள்ள ஒரு மோட்டார் செட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்கு காவல் துறையினர் சென்றபோது அவர்களைப் பார்த்த மூன்று நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
அதைப் பார்த்த காவல் துறையினர், அவர்களை விரட்டிச் சென்றபோது, காவல் துறையினர் பிடியில் ஆயிரப்பேரி பகுதியைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் கனகராஜ் (31) மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் மகன் ராமகிருஷ்ணன் (46) என்ற இருவரும் சிக்கினர்.