தென்காசிமாவட்டம் வாசுதேவ நல்லூர் பகுதியிலிருந்து இரண்டு சுற்றுலா வேன்கள் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அய்யாபுரம் விலக்கு இடையான்குளம் குளத்துக்கரை பகுதியில் செல்லும் போது, வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற ஆட்டோ மீது மோதி பக்கத்திலிருந்த குளத்து கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த ஊர் பொதுமக்கள் காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, மீட்பு பணியில் ஈட்டுபட்டு காயமடைந்தவர்களை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.