தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனத்தை அடிக்கடி தள்ளிவிட்டு இயக்கும் காவலர்கள்! - காவலர்கள் ரோந்து வாகனம்

தென்காசி: சங்கரன்கோவில் காவலர் ரோந்து வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பழுது காரணமாக அவ்வப்போது வாகனத்தை காவலர்கள் தள்ளி இயக்க வேண்டிய நிலை உள்ளது.

police_van_problem
police_van_problem

By

Published : Oct 22, 2020, 3:55 AM IST

சங்கரன்கோவில் உட்கோட்ட காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு என்று காவல் ரோந்து வாகனம் உள்ளது. இந்த காவல் ரோந்து வாகனத்தில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உட்பட எட்டு காவலர்கள் பணிபுரிகின்றனர். இந்த வாகனம் சங்கரன்கோவில் உட்கோட்ட பகுதிகளில் 24மணி நேரமும் ரோந்து பணியில் இருந்து கொண்டிருக்கும்.

தற்போது இந்த காவல் ரோந்து வாகனம் பழுதடைந்துள்ளதால், அவசர தேவைக்கு இந்த வாகனத்தை உடனடியாக இயக்க முடியாது. பத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனத்தை பின்னால் இருந்து தள்ளிதான் இயக்க வேண்டும். இந்த ரோந்து வாகனத்தில் பேட்டரி உட்பட பல்வேறு பொருட்கள் பழுதடைந்துள்ளதால், இதனை அவசர தேவைக்கு எடுத்து செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் இந்த காவல் ரோந்து வாகனத்திற்கு போதிய டீசல் வசதி இல்லாத காரணத்தால் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் பணிபுரிந்த எட்டு காவலர்கள் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட அனைவரும் அவரவர் இருசக்கர வாகனத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரோந்து செல்லக்கூடிய காவலர்களுக்கு மற்ற காவல்துறை அலுவலர்கள் போல் தரமான வாகனத்தை கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details