தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தென்காசி : உ.பி.,யில் பட்டியலினப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த நபர்களைத் தூக்கிலிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
Tmmk protest in tenkasi

By

Published : Oct 31, 2020, 2:05 AM IST

Updated : Oct 31, 2020, 6:15 AM IST

தென்காசி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், தமிழ்நாடு சிறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவிப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்றுக் அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த நபர்களை தூக்கிலடக் கோரியும், அவர்களை காப்பாற்ற முயலும் யோகி அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், பொதுமக்களுக்கு உண்மை செய்திகளை வழங்கும் ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

Last Updated : Oct 31, 2020, 6:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details