தென்காசி:சங்கரன்கோவில் அருகேயுள்ள வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் வைரவசாமி (வயது30). இவரது மனைவி முத்துமாரி (23). கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே பைக்கில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
வாகனம் நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் சமத்துவபுரம் தாண்டி சென்ற போது திடீரென எதிரில் காரில் வந்த மர்ம நபர்கள் வைரவசாமி - முத்துமாரி தம்பதியினரை வழி மறித்து வைரவசாமியை கம்பு மற்றும் கற்களால் தாக்கினர் . இதில் அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.