தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை! - Tenkasi Latest News

தென்காசி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

By

Published : Feb 26, 2023, 10:17 AM IST

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

தென்காசி அருகே தேவிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர், ரமணன், வயது 48. இவரது மனைவி கமலா, இவர்களது மகள் நாகஜோதி (18). திருநெல்வேலி கல்லூரியில் மண்ணியல் துறையில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரமணன் தனது மகளை கல்லூரிக்கு அனுப்புவதற்கு சிவகிரியில் இருந்து பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், நாகஜோதி கல்லூரிக்கு செல்லாமல் தனது அம்மாவின் சித்தப்பா மகனான தாய்மாமன் ராஜேஷ் என்பவருடன் திருச்செந்தூர் சென்றுள்ளார்.

இதனையறிந்த ரமணன் தனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்து கண்டித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக குடும்பத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரமணன் அவருக்கு சொந்தமான வயலில் அவரது மனைவி, மகளுடன் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலை முயன்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

இதில் தாய் கமலாவும், மகள் நாகஜோதியும் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ரமணனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ரமணனும் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தீரன் பட பாணி.. நீலகிரியில் பவாரியா கும்பல்.. வனப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு..

ABOUT THE AUTHOR

...view details