தென்காசி: தென்காசியில் மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை காசி விஸ்வநாதரின் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாரங்களை காண்பிக்கப்பட்டது.
11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை இரு வேலைகளிலும் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாள்தோறும் காமதேனு, சிம்மம், ரிஷபம், கிளி போன்ற வாகனங்களில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.