தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேர்மனை உள்ளே வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்! செங்கோட்டையில் நடந்தது என்ன?

செங்கோட்டை நகர மன்றக் கூட்டரங்கில் இருந்து, நகராட்சி தலைவியை வெளியேறவிடாமல் கதவை பூட்டிய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேர்மனை உள்ளே வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்! செங்கோட்டையில் நடந்தது என்ன?
சேர்மனை உள்ளே வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்! செங்கோட்டையில் நடந்தது என்ன?

By

Published : May 19, 2023, 2:15 PM IST

சேர்மனை உள்ளே வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்! செங்கோட்டையில் நடந்தது என்ன?

தென்காசி:தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு (மே 10), செங்கோட்டையில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தின்போது ஆரம்பம் முதலே கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் வார்டு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனவும் அதிகாரிகளிடமோ, தலைவியிடமோ புகார் கொடுத்தால் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வருவதில்லை எனவும் கூறி பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால், நகர்மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்களும், நகர்மன்றத் தலைவியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அது தொடர்பான காட்சிகளும் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அதன் பின் இரு தரப்பினரும் செங்கோட்டை காவல் நிலையத்தில் மாறி மாறி ஒருவரை ஒருவர் புகார் அளித்த நிலையில், இரு தரப்பினர் மீதும் செங்கோட்டை போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று (மே 19) நகர மன்றக் கூட்டமானது நடைபெற்றது.

கூட்டத்தின் போது, 5 தீர்மானங்கள் மன்றப் பொருளாக வைக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துகளை கேட்காமலேயே, 5 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக திமுக கவுன்சிலரான பேபி ரஷப்பாத்திமா என்பவர் கூற, ஆவேசம் அடைந்த கவுன்சிலர்கள் மக்கள் நலப் பிரச்சினைகளை நிறைவேற்றுவதை விட்டு விட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுவது கண்டனத்திற்கு உரியது என பிரச்னையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கூட்டத்தின் போது, திமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் அல்லாத ஒரு நபர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவுன்சிலர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, திமுகவைச் சேர்ந்த அந்த நபரை போலீசார் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றிய நிலையில், தங்கள் வார்டு பகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனக் கூறி கவுன்சிலர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, நகராட்சி தலைவியான ராமலட்சுமி கூட்டரங்கில் இருந்து வெளியே செல்ல முயற்சி செய்யவே கவுன்சிலர்கள், மக்கள் குறைகளைத் தீர்த்து வைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி கதவைப் பூட்டினர். அதனைத்தொடர்ந்து, பின்பக்க கதவைத் திறந்து நகராட்சி தலைவி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய நிலையில், அனுமதி இல்லாமல் கூட்டரங்கில் வீடியோ எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் வார்டு பகுதியில் உள்ள மக்கள் நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயப்ரியாவை சந்தித்து கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.

அந்தப் பகுதியில் தற்பொழுது காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடராமல் இருப்பதற்கு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னையால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:'நகராட்சி தலைவருக்கும், அதிமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல்'.. அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details