தென்காசி மாவட்டம்சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் ராஜா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த கௌசல்யாவு (21) என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு கௌசல்யா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறி (செப்.8) ஆம் தேதி கார்த்திக் ராஜாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கார்த்திக் ராஜா வீட்டிற்கு இருவரும் சென்று வாழ்க்கையை தொடங்கினர். அதன்பின் மறுநாள் (செப்.9) கார்த்திக் ராஜாவின் வேலை காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பின் வீடு உள்பக்கம் பூட்டியபடியே கிடந்துள்ளது.
நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி கௌசல்யாவை அழைத்துள்ளனர். அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கௌசல்யா தூக்கிட்டவாறு கிடந்தார். அதன்பின் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.