தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இரட்டிப்பு உயர்வு.!

தென்காசி: தென்காசி மலர் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

தென்காசி மலர் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இரட்டிப்பு
தென்காசி மலர் சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இரட்டிப்பு

By

Published : Dec 24, 2020, 7:37 PM IST

தென்காசி மாவட்டத்தில் சுரண்டை, சிவகாமிபுரம், செங்கோட்டை, கீழப்பாவூர் அருணாப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இங்கே விளையும் பூக்கள் தென்காசி, சிவகாமிபுரம், சுரண்டை போன்ற பகுதியில் உள்ள பூ சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தொடர் மழையாலும், பனியின் காரணமாகவும் பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மலர் சந்தையில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரம் 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஆயிரம் 350 ரூபாய்க்கும், சம்பங்கிப் பூ 120 ரூபாய்க்கும், கேந்தி பூ ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், செவ்வந்தி 150 ரூபாய்க்கும், ரோஸ் பாக்கெட் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பூக்களின் வரத்து குறைவாக இருந்தாலும் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றத்தால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: குளிச்சா குற்றாலம்’ எல்லாம் சரிதான்... கரோனா பாதுகாப்பு முக்கியம் பாஸ்...!

ABOUT THE AUTHOR

...view details