தென்காசி: சங்கரன்கோவிலில் காந்திநகர் பகுதியில் பாஜகவின் சார்பில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமிற்காக காந்திநகர் மண்டபம் பகுதியில் இருந்து கழுகுமலை சாலை வரை பாஜகவின் கொடி கம்பங்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.
கழுகுமலைச்சாலையில் பள்ளிவாசலுக்கு அருகில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த இஸ்லாமிய இளைஞர்கள் அதனை அகற்றுமாறு கூறிவந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பகுதியில் திரண்ட இஸ்லாமிய இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படம் பொறித்து வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் கொடி கம்பங்களை கிழித்து எறிந்தனர்.