தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டை உடைத்து பணம் கொள்ளை - Theft incident at sankarankovil

திருவேங்கடத்தில் பூட்டிய வீட்டை திறந்து ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளையடித்தவர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருட்டு சம்பவம்
திருட்டு சம்பவம்

By

Published : Jun 29, 2021, 5:17 PM IST

Updated : Jun 29, 2021, 7:01 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் வசித்துவருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருவேங்கடத்தில் கிரஷர் தொழிற்சாலை நடத்திவருகிறார்.

கோபாலகிருஷ்ணனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவரது சொந்த ஊரான திருமங்கலத்தில் தங்கி சிகிச்சைப் பெற்றுள்ளார். இதற்காக திருவேங்கடத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் தொழிற்சாலையின் ஊழியர், கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கு காலையில் சென்றபோது வீட்டின் பீரோவில் இருந் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக, வேறொரு இடத்தில் கோபாலகிருஷ்ணனின் நகை இருந்ததால் அது கொள்ளையடிக்கப்படவில்லை.

இந்தக் குற்றச்சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Last Updated : Jun 29, 2021, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details