தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த திருவேங்கடம் மைப்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்தல்ராஜ். இவரது மகள் சிவராணி, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜெயராமன் என்பவரின் மகன் கண்ணனை காதலித்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி, சிவராணி தனது சம்பள பணத்தை காதலன் கண்ணனுக்கு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
மகளுடைய காதலனின் பெற்றோரை கொலை செய்த தந்தை - இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! - Court sentenced to double life sentence for tenkasi double murder
தென்காசி: மகள் காதலனின் பெற்றோரை கொலை செய்த காதலியின் தந்தைக்கு, நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 21.03.2015 தேதியன்று ஏற்பட்ட தகராறில் கண்ணனின் தந்தை ஜெயராமன், தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் சிவராணியின் தந்தை முத்தல்ராஜ் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருவேங்கடம் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி கோகிலா முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜ பிரபாகரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முத்தல்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.