தென்காசி மாவட்டம், ஊர்மேனி அழகியான்புரத்தைச் சேர்ந்தவர் பால்தினகரன்(30). இவர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றவாளியான பால்தினகரனை காவல் துறையினர் பிடிக்கச் சென்றனர்.
அப்போது, சக்திவேல் என்ற காவலரை பால்தினகரன் வீட்டிலிருந்த அரிவாளால் தலைப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், படுகாயமடைந்த சக்திவேலை சக காவலர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர்.