தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பெரியபிள்ளை வலசை, தேன்பொத்தை, திருமலைக்கோயில் ஆகிய பகுதிகளில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை, பேருந்து நிறுத்தம், அனைத்து சமுதாயத்திற்கான தகனமேடை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது அபூபக்கர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வீசக்கூடிய அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் எனப் பொதுமக்கள் எண்ணம் இருப்பதால், வழிபாட்டுத் தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைவாக கையாள வேண்டும்.
'வேளாண்சட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் தெளிவான முடிவு இல்லை'- கடையநல்லூர் எம்எல்ஏ புதிய வேளாண் சட்டங்களைப் பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என அரசாணை பிறப்பித்துள்ளன. அதேசமயம், தமிழ்நாட்டில் விவசாயிகளின் நண்பன் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் திட்டத்தில் தெளிவான முடிவை பின்பற்றாமல் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவருகிறார்.
திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ மக்களின் எதிர்ப்பைச் சந்தித்துவரும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் எப்படி எதிரான அலை இருந்ததோ அதே நிலை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் நிலவும், திமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சியமையும்" என்றார்.
இதையும் படிங்க: சிறுபான்மையின மக்களின் வாக்குகள் திமுக கூட்டணிக்கே - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி