தென்காசி: தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் கிராமத்தை சேர்ந்த முகேஷ் (எ) ராக்கி (27); கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்று (ஏப்ரல் 17) காலையில் குறும்பலாப்பேரியிலிருந்து மேலப்பாவூர் செல்லும் வழியில் இருக்கும் கருப்பசாமி கோயில் அருகே உள்ள தனியார் தோட்டத்தில், முகேஷ் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தென்காசியில் இளைஞர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை! - young man died
மேலப்பாவூரில் கூலித் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த அடையாள தெரியாத நபர்கள காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொடூரமாக வெட்டப்பட்ட இளைஞனின் உடல் மீட்பு
சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் காவல்துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பல கோணங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!