தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாள்களாக ஐந்தருவி அருகே உள்ள தோட்டங்களில் ஒற்றை யானை சுற்றி வருவதைப் பார்த்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனச்சரகர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் எட்டு பேர், அப்பகுதியில் முகாமிட்டு, யானை நடமாட்டத்தை கண்காணித்து அந்த யானையை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.
யானை தாக்கி உயிரிழந்த வனச்சரகரின் உடல் மீட்பு! - Elephant attack in tenkasi
தென்காசி: குற்றாலம் வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த வனச்சரகரின் உடலை மீட்ட வனத்துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, நேற்று (ஆகஸ்ட் 12) மாலை யானை மீண்டும் அப்பகுதிக்கு வந்ததைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள், தீப்பந்தங்களைக் காட்டி யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குற்றாலம் வனச்சரகத்தில் பணிபுரிந்து வரும் நன்னகரத்தைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துராஜ்(57) என்பவர் யானையிடம் சிக்கி உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற வனத்துறையினர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். பின்னர், முத்துராஜ் உடலை மீட்க பல மணி நேரம் போராடிய நிலையில், நேற்றிரவு யானை எந்த திசையில் உள்ளது என்பதும் தெரியாததால் முத்துராஜின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) காலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.