தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பரிந்துரையை கைவிட வேண்டி மனு

தென்காசி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய பரிந்துரையைக் கைவிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

By

Published : Mar 29, 2021, 8:36 PM IST

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவர் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடியில் தலைமை அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இவருக்கு மார்ச் 26ஆம் தேதி சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு ஆசிரியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்டன. ஆனால் ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் அந்த இடத்தில் அஞ்சல் வாக்கைப் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. மாறாக அடையாளம் தெரியாத நபர்கள், இவரின் பெயரில் வாக்குச்சீட்டைப் பெற்று குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்து அதைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு

இதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அந்த ஆசிரியைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 29) மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "நான் அஞ்சல் வாக்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்களையும், சமூக வலைதளங்களில் அதனைப் பதிவிட்ட நபர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் விடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைப் பரிந்துரையைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருத்தணி தொகுதித் தேர்தலைத் தள்ளிவைக்க நீதிமன்றம் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details