தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி தீண்டாமை விவகாரம்... பாஞ்சாகுளம் விஏஓ பணியில் இருந்து விடுவிப்பு... - The revenue department sealed the operation

தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளத்தில் தீண்டாமை விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்த வந்த மல்லிகா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 19, 2022, 8:06 AM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில், ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது என்று கூறும் பெட்டிக்கடை உரிமையாளரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த தீண்டாமை சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரிலும் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். வீடியோ எடுத்து வெளியிட்ட கடைக்காரர் மகேஷ் என்பவர் தலைமறைவாகியதை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே பாஞ்சாகுளம் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா என்பவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். புதிய அதிகாரியாக மாரியப்பன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:நாகர்கோவிலில் மத நல்லிணக்கத்துடன் இஸ்லாமிய வாழ்வியல் கண்காட்சி

ABOUT THE AUTHOR

...view details