கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வு காரணமாக, கடந்த 7ஆம் தேதி மதுபானக் கடைகள் அனைத்தையும் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, தென்காசியில் கரோனா தாக்கம் அதிகம் பாதித்த கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளிலிருந்த 158 கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், மதுபானக் கடைகளில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, மதுபானக் கடைகளை மூடிவிட்டு, ஆன்லைனில் விற்பனை செய்யுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.